கற்பதற்குத் தகுதியான நூல்களை தடையில்லாமல் கற்க வேண்டும். கற்றதன் பின்னர் கற்ற அக்கல்வியின் தகுதிக்குத் தகுந்தபடி நடக்கவும் வேண்டும் என்பது திருவள்ளுவரின் வாக்கு ஆகும். கல்வி என்பது ஒரு நாட்டின் முதுகெலும்பாக செயல்படுகிறது என்பதை நாம் நன்றாக அறிவோம். இன்று கல்வித்துறை பல தொழில்நுட்பங்களை உள்ளடக்கி தினம் ஒரு முன்னேற்ற பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இப்படி நாளொரு மேனி, பொழுதொரு வண்ணம் என வளர்ந்து வரும் கல்வித்துறையில் நடைபெறும் தற்கால நிகழ்வுகள் பற்றியும், கல்வித்துறையில் காணப்படும் புதிய தொழில்நுட்பங்கள் பற்றியும், கொரோனா பரவலுக்கு பின்னர் கல்வித்துறையில் ஏற்பட்ட மாற்றங்கள் பற்றியும் நீங்கள் தெரிந்து கொள்ள உங்களுக்கு இந்த வலைத்தளம் உதவியாக இருக்கும். இங்கு மாணவர்கள் தங்கள் பள்ளிக்கல்வியை தொடங்க சிறந்த பள்ளிகளை தேர்வு செய்யும் முறைகள், மாணவர்களுக்கு தகுந்த பாடத்திட்டங்கள் என்னென்ன உள்ளன, அந்த பாடத்திட்டங்களில் இருந்து மாணவர்கள் தங்களுக்கு உகந்த திட்டத்தை தேர்வு செய்யும் வழிகள், போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் முறைகள், பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு உள்ள போட்டி தேர்வுகளின் வகைகள், கோவிட் கால சூழ்நிலைகளுக்கு பின்னர் கல்வித்துறையில் ஏற்பட்ட மாற்றங்கள், தற்போது பெருகிவரும் ஸ்மார்ட் வகுப்பறை குறித்த தகவல்கள், ஸ்மார்ட் வகுப்புகளின் குறை மற்றும் நிறைகள், பள்ளி குழந்தைகளுக்கு உளவியல் ரீதியாக ஏற்படும் பிரச்சனைகள், மாணவர்கள் தங்கள் வருங்கால நலனை நினைவில் வைத்து பள்ளிக்கல்வி முடித்ததும் செய்ய வேண்டிய விஷயங்கள், உலக அளவில் கல்வித்துறையில் தற்போது ஏற்பட்டுள்ள மாற்றங்கள் என கல்வி சம்மந்தப்பட்ட பல்வேறு தகவல்களை உங்களுக்கு வழங்குகிறோம்.