இந்தியாவில் உள்ள பல்வேறு கல்வி வாரியங்கள்.

கல்வியைத் தேடுகிறார்கள் என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். மேலும் எந்தவொரு முறையை நீங்கள் தேர்ந்தெடுக்கும் முன் மாணவரின் எதிர்கால வாய்ப்புகளை கருத்தில் கொள்ள வேண்டியது மிகவும் தங்கள் குழந்தைகளுக்கு சரியான கல்வி வாரியங்களை தேர்ந்தெடுப்பதில் பல பெற்றோர்களுக்கு நிறைய குழப்பங்கள் உள்ளன. தங்கள் குழந்தைகளை எதில் சேர்த்தால் நல்லது என்று பரிந்துரைக்கும்படி கேட்கும் பெற்றோரை நாம் அடிக்கடி சந்தித்திருக்க கூடிய வாய்ப்புகள் உண்டு.

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு என்ன மாதிரியான அவசியம் ஆகும். இதற்காக இந்தியாவில் உள்ள அனைத்து கல்வி வாரியங்களின், அனைத்து முக்கிய அம்சங்களையும் நீங்கள் நன்கு அறிந்திருக்க வேண்டும்.

இந்த குழப்பங்களுக்கு தீர்வு காண கொஞ்சம் கடினமாக இருக்கும் என்றாலும் கூட இது பற்றி தெரிந்து கொள்ளவேண்டியது மிகவும் அவசியம் ஆகும். இந்தியாவில் எத்தனை விதமான கல்வி முறைகள் செயல்பாட்டில் உள்ளன என்பதைப் பற்றியும், அவை ஒன்றுக்கொன்று எவ்வாறு மாறுபடுகிறது என்பதைப் பற்றியும் இங்கு விரிவாக காணலாம்.

1. மாநில வாரியம்: (ஸ்டேட் போர்டு)

இந்தியாவுக்குள் உள்ள ஒவ்வொரு மாநில மற்றும் யூனியன் பிரதேசத்திற்கும் அதற்கென சொந்த கல்வி வாரியம் உள்ளது. அரசாங்கத்தால் நடத்தப்படும் இந்த வாரியத்தில் இரண்டு முக்கிய தேர்வுகள் உள்ளன. 10 ஆம் வகுப்புக்கான மேல்நிலைப் பள்ளி சான்றிதழ் (எஸ்.எஸ்.எல்.சி) மற்றும் 12 ஆம் வகுப்புக்கான உயர்நிலை பள்ளி சான்றிதழ் (எச்.எஸ்.எல்.சி). இந்த வாரியம் வேறு எங்கும் இடமாற்றம் அடைந்து செல்லாமல் ஒரு குறிப்பிட்ட மாநிலத்தில் நிரந்தரமாக குடியேறிய மக்களுக்கு ஏற்றதாக இருக்கிறது. இதில் உள்ள பாட திட்டங்கள் அந்தந்த மாநிலத்தின் மொழியை அடிப்படையாக கொண்டு கற்பிக்கப்படுகிறது. மேலும் இதில் உள்ள கல்வி முறை பாடத்திட்டம் மற்ற முறைகளின் பாடத்திட்டங்களை விட எளிமையாகவே இருக்கும். இது குழந்தைகளுக்கு அவர்களின் பாடத்திட்டங்களுடன் உள்ளூர் மொழிகளையும் கற்பிக்கிறது. இந்த பாடத்திட்டத்தில் படிப்பு சுமை என்பது மிகவும் குறைவுதான். இது மாணவர்களுக்கு விளையாட்டு மற்றும் பிற பாடநெறி நடவடிக்கைகளில் பங்கேற்க வாய்ப்பளிக்கிறது. மாணவர்கள் மாநிலக் குழுவில் படிக்கும்போது உள்ளூர் கலாச்சாரம் பற்றியும் நிறைய கற்றுக்கொள்கிறார்கள். ஆங்கிலம் தவிர, மாநில வாரியத்தின் கல்வி முறைகளுக்குள் வரும் மற்ற அணைத்து பாடங்களையும் மாணவர்கள் தங்கள் உள்ளூர் மொழிகளில் படிக்கும் வசதியும் இதில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

2. மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்: (சி.பி.எஸ்.இ)

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ) என்பது மத்தியஅரசு நடத்தும் வாரியமாகும். இது மாநில அல்லது ஒரு நாட்டின் நிலையை மட்டும் பொருட்படுத்தாமல் ஒரு உலகளாவிய கல்வி முறையைப் பின்பற்றுகிறது. அடிக்கடி வேலை காரணமாக மாநிலம் விட்டு மாநிலம் இடமாற்றம் ஆகும் பெற்றோருக்கு இந்த வாரியத்தின் கீழ் தங்கள் குழந்தைகளை படிக்க வைப்பது ஏற்றதாக இருக்கும். சி.பி.எஸ்.இ 25 நாடுகளிலும், இந்தியாவின் அனைத்து பெரிய மற்றும் சிறு நகரங்களிலும் பரந்து விரிந்து காணப்படுகிறது. சி.பி.எஸ்.இ வழங்கும் பாடத்திட்டம், மாணவர்களுக்கு தங்கள் பிற்காலத்தில் எதிர்கொள்ளும் மருத்துவ மற்றும் பொறியியல் தேர்வுகளுக்கு தயாராக சிறந்ததாக இருக்கும். ஏனெனில் அனைத்து தேசிய நுழைவு சோதனை தேர்வுகளும் இதற்கு ஒத்த பாடத்திட்டங்களைக் கொண்டுள்ளன. இந்த பாடத்திட்டம் அறிவியல் மற்றும் கணிதத்தில் கவனம் செலுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதால், மொழிகளில் அதிக கவனம் செலுத்த வேண்டி இருக்காது. சி.பி.எஸ்.இ நடத்தும் இரண்டு முக்கிய தேர்வுகள், 10 ஆம் வகுப்புக்கான அகில இந்திய மேல்நிலைப் பள்ளி தேர்வு (ஏ.ஐ.எஸ்.எஸ்.இ) மற்றும் 12 ஆம் வகுப்புக்கான அகில இந்திய மூத்த பள்ளி சான்றிதழ் தேர்வு (ஏ.ஐ.எஸ்.எஸ்.சி.இ) ஆகும். இது 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை தொடர்ச்சியான விரிவான மதிப்பீட்டை (சி.சி.இ ) செய்யத் தொடங்கியுள்ளது. இவை ஆண்டின் இறுதியில் ஒரு தேர்வை வைத்து சோதிப்பதை விட ஆண்டு முழுவதும் பல பருவ தேர்வுகளை மேற்கொண்டு மாணவர்களை சோதிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன. ஆங்கிலம் தவிர, சி.பி.எஸ்.இ முறையில் ஹிந்தி மொழிக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

3. இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சில்:

இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சில் என்பது ஒரு தனியார் நடத்தும் வாரியம் ஆகும். இது மூன்று முக்கிய தேர்வுகளை நடத்துகிறது. இது 10 ஆம் வகுப்புக்கான இடைநிலைக் கல்விக்கான இந்திய சான்றிதழ் (ஐ.சி.எஸ்.இ) தேர்வு, 12 ஆம் வகுப்புக்கான இந்திய பள்ளி சான்றிதழ் (ஐ.எஸ்.சி) தேர்வு மற்றும் சி.வி.இ (தொழிற்கல்விக்கான சான்றிதழ்). இந்தியா, யு.ஏ.இ, சிங்கப்பூர் மற்றும் இந்தோனேசியாவில் ஐ.சி.எஸ்.இ வாரியத்தின் கல்விமுறை உபயோகத்தில் உள்ளது. இது 23 இந்திய மொழிகள் மற்றும் 12 வெளிநாட்டு மொழிகளைத் தவிர பல தலைப்புகளை உள்ளடக்கிய பரந்த பாடத் திட்டத்தை கொண்டுள்ளது.

4. சர்வதேச பேக்கலரேட்:

இன்டர்நேஷனல் பேக்கலரேட் (ஐ.பி) என்பது ஒரு தனியார் நடத்தும் கல்வி அமைப்பு ஆகும். இதன் தலைமையகம் சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனிவாவில் அமையப்பெற்றுள்ளது. இது மூன்று முக்கிய திட்டங்களைக் கொண்டுள்ளது: கே.ஜி முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான ஆரம்ப ஆண்டு திட்டம். 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்புக்கான இடை ஆண்டு திட்டம். 11 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்புக்கான டிப்ளோமா திட்டம். இந்த வாரியம் 144 நாடுகளில் உலகளவில் சுமார் 3500 பள்ளிகளைக் கொண்டுள்ளது.

இது தவிர இடைநிலைக் கல்வியின் சர்வதேச பொது சான்றிதழ் மற்றும் திறந்த பள்ளி கல்வி நிறுவனம் ஆகிய இரண்டு கல்வி முறைகளும் பயன்பாட்டில் உள்ளது. எனினும் நம் நாட்டில் மாநில தேர்வு ஆணையம், சி.பி.எஸ்.இ ஆணையம் ஆகிய இரண்டுமே அதிகளவில் பயன்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க : சி.பி.எஸ்.இ , மாநில வாரியம் மற்றும் மத்திய வாரியம் இவற்றுக்கு உள்ள வேறுபாடுகள் என்ன?

Leave a Reply

கல்வி செய்திகள்

நேர்மறை சிந்தனைகளை வளர்ப்பது எப்படி?

ஒவ்வொரு பெற்றோர்களுக்கும் தங்கள்  குழந்தை வாழ்க்கையின் எல்லா துறைகளிலும் சிறந்து விளங்க வேண்டும் என்ற விருப்பம் இருக்கும். வாழ்க்கையில் வெற்றிபெற ஒருவர் நேர்மறையான அணுகுமுறையைக் கொண்டிருக்க வேண்டியது மிகவும் முக்கியம் ஆகும். ஒரு குழந்தை நம்பிக்கையுடனும், நேர்மறை சிந்தனையோடும் இருந்துவிட்டால், வாழ்க்கையில் எதை வேண்டுமானாலும் சாதிக்க முடியும். குழந்தைகளில் நேர்மறையான நடத்தையை ஊக்குவிக்க நீங்கள் செய்யக்கூடிய பல விஷயங்கள் உள்ளன. நேர்மறையான அணுகுமுறையை வளர்க்க உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் எவ்வாறு உதவ முடியும் என்பதை அறிய இந்த […]

Read More
கல்வி செய்திகள்

பள்ளி வாழ்க்கையில் உங்கள் குழந்தைகள் சிறந்து விளங்குவது எப்படி?

பள்ளியில் ஒரு குழந்தையின் வெற்றி பல்வேறு காரணிகளைப் பொறுத்தே அமைகிறது.  பள்ளியின் நிர்வாகத்தின் தரம், அங்கு பணிபுரியும் ஆசிரியரின் தரம்,  போன்றவை   ஒரு குழந்தையின்  பள்ளி வாழ்க்கையில் வெற்றியின் முக்கியமான கூறுகள் ஆகும். எந்தவொரு குழந்தையின் கல்வி சாதனைக்கும்  மிக முக்கியமான காரணி பெற்றோரின் கல்விச் செயல்பாட்டில் உள்ளது. உங்கள் குழந்தை பள்ளி வாழ்க்கையில் வெற்றியைப் பெற உதவும் ஐந்து சிறந்த உதவிக்குறிப்புகள் பற்றி இங்கே காணலாம். ஒரு வழக்கமான முறையை உருவாக்கி அவற்றை பின்பற்றுதல்:     […]

Read More
கல்வி செய்திகள்

கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ் என்றால் என்ன?

கம்யூனிகேஷன் அல்லது தகவல் தொடர்பு என்பது ஒரு நபருக்கு இடையே  தகவல் பரிமாற்றம் செய்ய பயன்படும் செயல்முறையாகும். இதற்கு மொழி மற்றும் கணிதம் போன்ற குறியீட்டு அமைப்புகளைப் பற்றிய பகிரப்பட்ட புரிதல் தேவை. குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் இருவருக்கும் தகவல் தொடர்பு திறன் என்பது  மிக முக்கியமானது. மாணவர்கள் பேசுவதை கற்றுக்கொள்வதை விட தகவல் தொடர்புக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். சுறுசுறுப்பாக கேட்பது முதல் வாய்மொழி மற்றும் சொற்கள் அல்லாத சமிக்ஞைகள் மற்றும் எழுதுதல் ஆகியவை […]

Read More